விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிக்கும் பட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சிறுத்தை பட இயக்குனர் ஷிவா இயக்கும் படத்தில் அஜீத் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு தற்காலிகமாக 'வெற்றிகொண்டான்' என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. இப்போது அது நீங்கி, அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜனவரியில் தொடர்ந்து 14 நாட்கள் இப்படத்துக்கு அவர் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறாராம். மொத்தம் 40 நாட்கள் அவர் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.www.rpbrothers.in
No comments:
Post a Comment
thanks for u r comments