DO u want website

:: DO u Want WEBSITE for u r Shop,bussiness,school,garments etc Then Just SEND Email TO :- RamkiCompany@Gmail.com :: NOW GET 50% discount on all types of WEBSITE By useing this OFFER CODE :: NARP :: :: HURRY up LIMITED period offer :: or go to www.RPbrothers.in ::: GET SUPER WEBSITE AT LESS AMOUNT Only AT RamkiCompany

Advertisment

resize

Wednesday 21 November 2012

மோசடி தடுக்க புதிய வங்கி காசோலைகள் அறிமுகம்


வங்கி காசோலைகளில் (செக்) மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய காசோலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பழைய காசோலைகளில், காசோலை எண், வங்கிகளின் பார் கோடு, அந்தந்த ஊர்களின் பார் கோடு எண் இருக்கும். புதிய காசோலைகளில், காசோலை எண், சிட்டி பார் கோடு, வங்கி பார் கோடு, கிளை பார் கோடு, நெப்ட் சோல் ஐ.டி, எனிவேர் பேங்கிங் பார்கோடு ஆகிய 6 வித பார் கோடு ஒரே வரிசையில் அச்சிடப்பட்டிருக்கும். இவற்றை முறைப்படுத்த நான்கு, நான்கு மாநிலங்களாக ஒருங்கிணைத்து நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன்(என்பிசி) என்ற அமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து சென்னையில் என்.பி.சி அமைப்பு உள்ளது. புதிய நடைமுறையின்கீழ் காசோலைகளை புழக்கத்தில் விடும் திட்டம் டெல்லியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு விட்டது. சென்னையில் சமீபத்தில் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இதர நகரங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இனி, போலியாக காசோலைகள் அச்சிடவோ, போலி கையெழுத்து போட்டு வினியோகம் செய்யவோ முடியாது. அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள், மாவட்ட கருவூலங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காசோலைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் திரும்ப பெறவேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று வங்கிகள் பழைய காசோலைகளை திரும்ப பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு புதிதாக காசோலை அச்சடித்து வழங்கும்போது புதிய நடைமுறையின்கீழ் பார் கோடு எண்கள் அடங்கிய காசோலைகளை மட்டுமே வழங்கி வருகின்றன. டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பழைய காசோலைகள் தானாகவே காலாவதியாகிவிடும்.

No comments:

Post a Comment

thanks for u r comments

Ramki tv Channel Live