விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘துப்பாக்கி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி விஜய் கூறியதாவது:- ‘துப்பாக்கி’ படத்தில் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. படத்தில் அது சிறுபகுதிதான். எல்லையில் இருந்து ஊருக்கு வரும் ராணுவ வீரன் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. ராணுவ சீருடை அணிந்ததும் சிலிர்த்து போனேன். தினமும் இதே உடையில் இருக்கும் ராணுவத்தினரின் மனதை உணர முடிந்தது. ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூட்டணியில் நடித்தது எனது கனவு நிறைவேறியது போல் இருக்கிறது. வழக்கமாக தயாரிப்பாளர்கள் என்னை அணுகி கதை பற்றி சொல்லி நடிக்க கேட்பார்கள். இயக்குனர் பற்றியும் சொல்வார்கள். சில நேரம் ரீமேக் படங்களில் நடிக்கவும் கேட்பது உண்டு. ஆனால் ‘நண்பன்’ படப்பிடிப்பில் நான் இருந்தபோது எனது தந்தை என்னிடம் வந்து ஏ.ஆர்.முருகதாசிடம் கதை, இருப்பதாகவும் நடிக்க சம்மதமா என்றும் கேட்டார். மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமான நாயகியாக இருந்தார். ரசிகர்களுக்கும் அவரை பிடிக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.
No comments:
Post a Comment
thanks for u r comments