இசையமைப்பது போன்ற காட்சிகள், படங்களில் இடம் பெற்றிருந்தால், அந்த காட்சிகளில், இசையமைப்பாளர்கள் நடிப்பது வழக்கம். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற, இசை ஜாம்பவான்கள், ஒரு சில படங்களில், இசையமைப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தனர். சமீபகாலமாக, யுவன் சங்கர் ராஜா, ஓரிரு படங்களில், பாடல் காட்சிகளில் தோன்றினார். ஆனால், இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடித்தது இல்லை. சமீபத்தில் தான், விஜய் ஆண்டனி, "நான் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு பின், தற்போது, பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும், விரைவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில், ஸ்ரேயா, ஹீரோயினாகலாம். படத்துக்கு பொருத்தமான, இயக்குனரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment
thanks for u r comments